வயது 41 ஆனாலும் மொட்டு மலராத ரோஜா போல் இன்றும் காட்சியளிக்கும் நடிகை லைலா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

laila-3
laila-3

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லைலா இவ்வாறு தன்னுடைய அழகான கண்கள் மற்றும் சிரிப்பு ஆகியவை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன்னுடைய வசீகரத்தால் கட்டிப் போட்டுவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி என வேற்று மொழி திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் நடிகை லைலா திரை உலகில் முதன்முதலாக ஹிந்தி சினிமா மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜயகாந்த் அஜித் சூர்யா விக்ரம் பிரசாந்த் சரத்குமார் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

அவ்வகையில்  தமிழில் அள்ளித்தந்த வானம், உன்னை நினைத்து, கம்பீரம், கள்ளழகர், தோசத்தின் ஆனந்தா, பார்த்தேன் ரசித்தேன், பிதாமகன், முதல்வன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இவருடைய கதாபாத்திரம் குறிப்பிட்டு பேசும் அளவிற்கு இருந்தது.

அந்தவகையில் லைலா விக்ரமுடன் இணைந்து தில் திரைப்படத்தில் நடித்த போது இவர் செய்யும் குல்பி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக இவரை அனைவரும் குல்பி லைலா என அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் மேலும் நமது நடிகை நந்தா மாற்றம் பிதாமகன் ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மாபெரும் விருதுகளை வாங்கி  பெருமை சேர்த்துள்ளார்.

laila-3
laila-3

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பிறகு திரை உலக பக்கத்தில் முகம் காட்டவில்லை அந்த வகையில் தற்போது பிள்ளை குட்டி உடன்  தனது குடும்ப வாழ்க்கையை மிக சிறப்பாக நடத்தி வரும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அலிசா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

laila-3
laila-3

மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு பேய் வேடம் கொடுக்கப்பட்டதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது. அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று  அவருடைய அழகில் விழுந்து கிடக்கிறார்கள்.