சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவ்வாறு தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு இவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் குமரன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதாவது விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த சீரியலின் மூலம் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் குமரன்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இவர் நடிகை லைலாவுடன் டூயட் பாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லைலா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீப்பதில் வெளியான வதந்தி என்ற வெப் சீரியல் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இந்த வெப் தொடரில் எஸ்.கே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் குமரன் தங்கராஜ் முக்கிய இடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரன் மற்றும் லைலா ஆகிய இருவரும் இணைந்து டூயட் பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோவை லைலா மற்றும் குமரன் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள் அதாவது பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம் என்ற திரைப்படத்தை இடம்பெற்றிருக்கும் கண்ணாலே மியா மியா என்ற பாடலுக்கு குமரன் மற்றும் லைலா இருவரும் இணைந்து கியூட்டாக நடனமாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..