90 கால கட்டத்தில் தனது கொழுக் மொழுக்கான உடல் அமைப்பினாலும் கவர்ச்சியினும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை குஷ்பு. தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது வயதானாலும் கூட கொஞ்சம் கூட இளமை குறையாமல் இளம் நடிகைகள் போல் செல்பி எடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குஷ்பூ ரஜினி,சரத்குமார், கார்த்திக், பிரபு, கமலஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற 90 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக கலக்கி வந்த அனைவருக்கும் ஜோடி போட்டு நடித்துள்ளார். எனவே தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து நடித்து வந்ததால் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடம் கிடைத்தது.
இவர் நடிகையாக மட்டும் நடிக்காமல் சின்னத்திரையில் சீரியல்கள், தொகுப்பாளர், அரசியல் அனைத்திலும் கவனம் செலுத்தி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிப்பதை மொத்தமாக நிறுத்திவிட்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் சில திரைப்படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நடைபெறும் என்றும் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது என்றும் படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாவுது அலை தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டிலேயே இருந்து வரும் குஷ்பூ சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இளம் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு ஓரக்கண்ணால் செல்பி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் கூட உங்களிடம் ஸ்டைலும் குறையவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.