80,90 களில் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர் குஷ்பூ. முதலில் தர்மத்தின் தலைவன் என்னும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார்.
அந்த வகையில் வெற்றி விழா, சின்னத்தம்பி, மைக்கேல் மதன காமராஜன், அண்ணாமலை, மன்னன், ரிக்சா மாமா, நாட்டாமை என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் படங்களில் கிளாமர் காட்டியும் நடித்ததால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவருக்கு கோயிலைக் கட்டிக் கொண்டாடினார் அந்த அளவிற்கு பிரபலமடைந்திருந்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த குஷ்பூ 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர். சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் இருக்கின்றனர். இப்பொழுதும் இருவரும் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் தொடர்ந்து தன்னுடைய சினிமா பயணம் குறித்தும்..
தன்னுடைய வாழ்க்கையில் நடந்தது குறித்தும் குஷ்பு பேசி வருகிறார். அப்படி அண்மையில் சின்ன வயதில் எப்படி வளர்ந்தேன் என பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகை குஷ்பூ பேசியது வைரலாகி வருகிறார் அதில் அவர் சொன்னது.. நான் நடிக்க வருவதற்கு முன்பு சின்ன வயதில் ஏர் ஹோஸ்டஸ் ஆக தான் நினைத்தேன் அப்பொழுது தான் உலகம் முழுவதும் சுற்றலாம் என நினைத்தாராம்.
ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என வருத்தத்துடன் கூறி உள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அது நடக்காமல் போனது நல்லது தான் இல்லையென்றால் உங்களை நாங்கள் சினிமாவில் பார்த்திருக்க முடியாது எனக்கூறி கமாண்ட் அடித்து லைக்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த செய்தி சோசியல் மீடியவில் தீயாய் பரவி வருகிறது.