தமிழ் சினிமாவில் பிரபுசாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் காமெடி நடிகை கோவை சரளா ஆகியோர் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் செம்பி.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்கம் நமது இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் ஏற்கனவே மைனா கும்கி கயல் போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கியதும் மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் தொடரி மற்றும் காடன் ஆனால் இந்த கடைசி இரண்டு திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
பொதுவாக நடிகை கோவை சரளா காமெடி வேடங்களில் மட்டுமே அதிக அளவு திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் அந்தவகையில் இவர் காஞ்சனா திரைப்படங்கள் சமீபத்தில் நடித்ததை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இவருடைய காமெடி தனித்துவ படுத்திக் காட்டியது.
இந்நிலையில் முதன்முதலாக வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிகை கோவை சரளா நடிப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கோவை சரளாவின் லுக் வித்தியாசமாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது இதோ சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.