நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தன்னுடைய கொழு கொழு தேகத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் வளைத்துப் போட்டவர் கொழு கொழு நடிகை, இவரை பலரும் பழம்பெரும் நடிகையின் மறுபிறவி என கூறினார்கள் அந்த அளவு கொழுகொழுவென தக்காளி போல இருந்தார்.
இவர் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தது மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார், இவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்றாலும் அழகாக இருக்கிறாரே என அள்ளிப் போட்டுக் கொண்டார்கள் நமது நடிகர்கள்.
இந்தக் கொழு கொழு நடிகை ஏற்கனவே காதலில் தோல்வியடைந்த நடிகரின் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தார், அந்த நடிகரின் வண்டவாளம் தெரிந்ததும் கொழு கொழு நடிகையின் அம்மா நடிகரின் காலில் விழுந்து கதறி கெஞ்சிக்கூத்தாடி என் பெண்ணை விட்டுவிடுமாறு கேட்டதும் அந்த காதல் தோல்வி நடிகரும் கொழு கொழு நடிகை விட்டுவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது முன்னணி நடிகையாக இருக்கும் நாயகியின் முன்னாள் காதலரான இவர், அந்த நாயகியுடன் செய்த சில்மிஷங்கள் அனைத்தையும் கொழு கொழு நடிகையின் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டார்களாம் அதனால்தான் இந்த பிரச்சனை வெடித்தது, தன்னுடைய முன்னாள் காதலியையும் அதன் பிறகு வந்த காதலையும் மறப்பதற்காக நடிகர் ராஜ போதையில் இருந்துள்ளார்.
ஆனால் சமீபகாலமாக அந்த நடிகர் படத்தில் நடிப்பதை மட்டும் தனது வேலையாக வைத்துள்ளார், அவர் திடீரென இப்படி மாறியது ரசிகர்களுக்காக தான் எனக் கூறுகிறாராம், அதனால் தற்போது இந்த நடிகரை வைத்து படம் இயக்குவதற்காக முன்னணி இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள், இருந்தாலும் தன்னுடைய பழைய காதலி ஒருவருடன் கெஸ்ட் ரோலில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
அந்த நடிகர் என்னமோ நட்புடன் தான் பழைய காதலி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார், அதனால் நட்புடன் தான் பழகி உள்ளார் ஆனால் தனக்கு பட வாய்ப்பு இல்லாததால் யாரும் தன்னை பார்ட்டியில் சேர்த்துக் கொள்ளாததாலும் மீண்டும் பழைய காதலர் உடனே கொழு கொழு நடிகை கைகோர்த்து உள்ளாராம்.
இந்த முறை மீண்டும் காதல் கூடினால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள், அதேபோல் தற்போது கொழு கொழு நடிகை தன்னுடைய அம்மா பேச்சை கொஞ்சம் கூட கேட்பதே கிடையாது, தன்னுடைய அம்மா எது சொன்னாலும் உன் பேச்சை கேட்டு என் காதலை விட்டது போதுமென ஒரே வார்த்தையில் வாயை மூட வைத்து விடுவாராம். தற்பொழுது இருவரும் ஜாலியாக சுற்றி வருகிறார்களாம்.