Kiran Rathod : ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வந்தவர் கிரண். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான “ஜெமினி” படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது திறமையையும் அழகையும் காட்டி ரசிகர்களை வளைத்து போட்டதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் அள்ளினார்.
அந்த வகையில் அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம், சரத்குமார் உடன் அரசு, விஜயகாந்த் உடன் தென்னவன் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்த இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் நடிகை கிரண் மற்ற நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் இதனால் பட வாய்ப்புகள் ஒன்னு, இரண்டு எட்டி பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்று தனக்கு நடந்த சோகமான விஷயத்தைப் பற்றி பேசி உள்ளார் நான் ஒருவரை காதலித்தேன். அதுதான் என் வாழ்க்கையில் நான் செய்த பெரிய தப்பு அது மட்டும் நடக்கலனா நான் திரை உலகில் இருந்து இவ்வளவு தூரம் சென்று இருக்க மாட்டேன்.
சிலர் என்னை சினிமாவிலிருந்து ஒதுக்கி வச்சிட்டாங்க தற்பொழுது நான் விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறேன் என கூறினார் மேலும் பேசிய அவர் பிக்னி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டதால் உனக்கு எவ்வளவு ரேட் என கேட்டார்கள் அது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது என தனது வேதனையை பகிர்ந்து உள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காதால் தான் தற்பொழுது இந்த நிலைமையில் இருக்கிறீர்கள் லியோ படத்தின் மூலம் உங்களுக்கு மாற்றம் கிடைக்கும் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.