3 முறை திருமணம்.. 4 குழந்தைகள் பிறந்திடுச்சுன்னு ரேவதி மேம் வாழ்த்தினாங்க.. கண்கலங்கிய கிரண்

Kiran Rathod
Kiran Rathod

Kiran Rathod interview: நடிகை கிரண் தனது மோசமான வதந்திகள்  குறித்து சமீப பேட்டியில் கூறி கண்கலங்கி உள்ளார். கவர்ச்சியில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிரண் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

6 ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து திரைவுலகில் பிரபலமான இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இது குறித்து, இன்ஸ்டாகிராமில் பதிவுகளை நான் போட்டு வர காரணமே நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் நடிக்க எப்பொழுதுமே ரெடி என்பதை அறிவிக்க தான்.

மற்றபடி வேறு எதற்காகவும் இல்லை ஆனால் சினிமா வாய்ப்புகள் சுத்தமாக எனக்கு வராததற்கு காரணம் எனக்கே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இவரிடம் நீங்கள் எதிர்கொண்டதிலேயே மோசமான வதந்தி என்றால் எது என கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த கிரண் எனக்கு மூன்று முறை திருமணமாகிவிட்டது என்றும், நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது தான் மிகவும் மோசமான வதந்தியாக நான் நினைக்கிறேன் எனக்கு இதுவரைக்கும் ஒருவாட்டி கூட திருமணமாகவில்லை.

என் அம்மா மற்றும் பிரதர் உடன் தான் இருந்து வருகிறேன் ஒரு போஸ்ட் போட்டால் கூட அம்மாவிடம் காட்டிவிட்டு ஓகேன்னு சொன்னால்தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவேன் என்றார். என்னைப் பற்றிய கிளப்பிய ரூமரை விட அதனையும் உண்மை தானே என்று நம்பி ஒரு முறை சூட்டிங்கில் என்னை பார்த்த நடிகை ரேவதி மேம் திடீரென கிட்ட வந்து ஹே கங்கிராட்ஸ் என கைகுலுக்கி வாழ்த்தினார்.

எதுக்கு மேம்னு கேட்டேன், குழந்தை பிறந்திருச்சாமே சொல்லவே இல்லன்னு சொன்னாங்க ஐயோ மேம் எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல அது ஃபுல்லாவே ரூமர்னு சொன்னதும் அவங்க ஃபேஸ் டல்லா ஆயிடுச்சு என அந்த பேட்டியில் கிரண் கண்கலங்கி கூறியுள்ளார்.