பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் இன்ஸ்டாகிராம் சூறாவளி.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறார்.

இதன் காரணமாக ஒரு சிலரின் குணம் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அவர்களுக்கு தொழுது தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ஆறாவது சீசன் மிகவும் அட்டகாசமாக ஆரம்பித்துள்ளது இந்த நிகழ்ச்சியில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ஜி பி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் மேலும் நேற்றில் இருந்து ஏராளமான பிரச்சனைகள் இவர்களுக்கிடையே தொடங்கியுள்ளது இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்நிகழ்ச்சியின் வைல்டு கார்டு என்ரியாக கிரண் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்ல இருக்கிறாராம். அதாவது சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்களை அதிர வைக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவருடைய உண்மையான முகம் தெரியும் என்பதற்காக தான் இந்த முடிவை எடுத்து உள்ளாராம் அதோட மட்டுமல்லாமல் இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் போட்டாலும் இருந்து வரும் நிலையில் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்ப்பில் இருந்து வருகிறாராம் இப்படிப்பட்ட நிலைகள் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் வாங்கும் சம்பளம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது அதாவது ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் கேட்டு இருக்கிறாராம் ஆனால் இது அதிகமாக இருப்பதால் விஜய் டிவி 1.5 லட்சம் சம்பளம் கொடுக்க முடிவெடுத்துள்ளார்களாம் இதற்கு ஒப்புக்கொண்ட கிரண் கையெழுத்து போட்டுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்களில் பங்கு பெற இருக்கிறார். இவ்வாறு இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்ட எந்த ஒரு பிரபலமும் இந்த அளவிற்கு சம்பளம் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.