அட நம்ம கிரண்னா இப்படி 10 நாளில் மாறியுள்ளார்.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்

kiran
kiran

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கிரண். இவர் தமிழ்த் திரையுலகில் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் கதாநாயக அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, முதல் படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்றார் இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், கமல், அர்ஜுன் பிரசாந்த் என பலருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலகட்டத்தில் பிஸியாக வலம் வந்து கொண்டே இருந்தாலும் சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் சினிமா துறையை விட்டே ஓடிவிட்டார் என பலர் விமர்சித்தனர். ஆனால் திடீரென திரும்பவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆனால் இப்பொழுது எப்படிப்பட்ட கேரக்டர் என்றால் அம்மா, சித்தி போன்ற கேரக்டர்கள் தான் கிடைக்கின்றன. கிரண் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

கிரண் அவர்களுக்கு தற்பொழுது 38 வயது ஆகி இருந்தாலும் சமூக வலைதளத்தில்  அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாக மாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கிரண் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பத்து நாளுக்கு முன்னாடி தொப்பையாக இருந்த கிரண் தற்பொழுது எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்.