90 கால கட்டங்களில் பிரபலமடைந்த நடிகை, நடிகர்கள் பலரும் இப்பொழுதும் நடித்து வருகின்றனர் என்ன இப்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் அம்மா, சித்தி, அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடுகின்றனர் அந்த வகையில் நடிகை குஷ்பூ 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார்.
மேலும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தார் ஆனால் தற்பொழுது அவரது நிலைமை மாறி ஹீரோ, ஹீரோயின் படங்களில் அம்மா, சித்தி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்நிண்ட இடைவெளிக்கு பிறகு அண்ணாத்த படத்தில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் நடிகை குஷ்பூ நடித்துவரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் ஹீரோவாக விஜய் நடிக்கிறார். அண்மையில் கூட நடிகை குஷ்பு விஜய் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் அது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலானது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை குஷ்பு டாப் பிரபலங்கள் இருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது குஷ்பூ வேறு யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை 90 காலகட்டங்களில் நடிகை குஷ்பூ சரத்குமார் மற்றும் பிரபு உடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வாரிசு படத்தில் இவர்கள் மூவரும் சந்தித்துக் கொண்டனர் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது..! இதோ நீங்களே பாருங்கள் நடிகை குஷ்பு, சரத்குமார் மற்றும் பிரபு ஆகியோர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். அதில் ஒன்றில் குஷ்பூ பிரபுவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு இருப்பார் அது வைரலாகி வருகிறது. இதோ ரசிகர்களை கவர்ந்திழுத்த புகைப்படங்கள்..
பல வருடத்திற்கு முன்பு பிரபு மற்றும் குஷ்பூ காதலித்ததாக பத்திரிகைகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.