பல ஆண்டு காலங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை குஷ்பூ. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இவருடைய நடிப்பையும் தாண்டி கவர்ச்சியான உடல் அமைப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் குஷ்புவிற்காக கோவில் கட்டிய கதைகளும் உண்டு.
இப்படிப்பட்ட நிலையில் குஷ்பூ சமீப பேட்டி ஒன்றில் தன்னுடைய அப்பாவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறியிருக்கும் நிலையில் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் சமீப காலங்களாக குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
பல கட்சியில் பணியாற்றி வந்த இவர் தற்பொழுது பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார் மேலும் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த இவர் சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய எட்டு வயதில் தனது தந்தையால் நான் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறேன் என பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஒரு குழந்தைக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அதுதான் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக ஆறாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஆணோ, பெண்ணோ என்பதில் எந்த சிக்கலும் கிடையாது எனது அம்மாவிற்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை அமைந்தது.
எங்களுக்கு மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவன் அமைந்தார். எனது ஒரே மகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதை தன்னுடைய பிறப்புரிமை போல் அவர் நினைத்துக் கொண்டார் எனக்கு எட்டு வயதாகும் பொழுது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார் அவருக்கு எதிராக துணிச்சலுடன் நான் பேசும் பொழுது எனக்கு 15 வயதாகும்.
எனக்காக நான் ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது ஒருவேளை நான் இதை வெளியே சொன்னால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதன் காரணமாகவே நான் பல ஆண்டுகள் அமைதி காத்து வந்தேன் இதை நான் கூறினால் எனது அம்மா நம்பவில்லை என்றால் என்ன செய்வது? என்ற அச்சம் எனக்கு இருந்தது. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே எனது அம்மா வாழ்ந்து வந்தார் இனியும் நாங்க முடியாது என்று எனது 15 வயதில் முடிவு செய்த நான் அவருக்கு எதிராக பேச தொடங்கினேன்.
எனக்கு 16 வயது கூட ஆகாது எங்களை விட்டு அவர் பிரிந்தார். அடுத்த வேலை உணவுக்கு நாங்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருந்தோம் எனது வாழ்வில் குழந்தை பருவமானது பல பிரச்சனைகளை கொண்டது ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது என தெரிவித்தார்.