நடிகை குஷ்பூ பொய் சொன்னதை கண்டுபிடித்து வச்சு செய்யும் நட்டிசன்கள்.! விஜய், ராஸ்மிகா மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.!

kushboo
kushboo

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பூ சமீபத்தில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய கணவருடன் இணைந்து சில திரைப்படங்களையும் தயாரித்து வரும் நிலையில் இவர் பேட்டியின் பொழுது ரசிகரின் கேள்விக்கு பொய்யான பதில் அளித்துள்ள நிலையில் அதனை ரசிகர்கள் கண்டுபிடித்து விளாசி வருகிறார்கள்.

அதாவது தற்பொழுது நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சில வாரங்களில் நிறைவடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ்சாக பட குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டேன் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் இணைய இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களை வைத்து உருவாக இருக்கும் நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக ஆக்சன் நிறைந்த படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது  மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீப பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

kushboo 1
kushboo 1

இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகை குஷ்பூ விஜய் உடன் வாரிசு செட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது இது குறித்து குஷ்புவிடம் நீங்கள் வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு நடிகை குஷ்பூ நான் வாரிசு படத்தில் இல்லை என்றும் பக்கத்து செட்டில் இருந்ததால் விஜயை சந்தித்தேன் என்றும் குஷ்பூ கூறியிருந்தார்.

எனவே இதனையும் பலரும் உண்மை என நினைத்து வந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் வாரிசு திரைப்படத்தின் சூட்டிங்கின் பொழுது எடுத்த பிரதியோக புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு முன்பு குஷ்பூ பொய் சொன்னதை கண்டுபிடித்து அதனை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.