தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் தங்களது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்கள்.
இவர்கள் இருவருமே பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது இவர்கள் தமிழ், தெலுங்கு என்று இரு மொழித் திரைப்படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவரும் இணைந்து மகாநதி திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இவர்கள் இருவரும் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். தங்களது அழகிய மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா இருவரும் துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.