தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் சினிமாவிற்கு அறிமுகமானா சில காலகட்டத்திலேயே எனது நடிப்பு திறமையினாலும்,அழகினாலும் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்தார்.
இதன் மூலம் இவருக்கு பல படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் இரண்டு படமும் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற திரையுலகிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சாணி காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
அந்த வகையில் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் அளவிற்கு கிளாமரான மற்றும் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.