ஏராளமான நடிகைகள் தாங்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர்கள் உள்ளார்கள் அந்த வகையில் தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் அவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கலக்கி வந்த இவர் சமீப காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சாணிக் காகிதம் இந்த திரைப்படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.மேலும் தற்பொழுது இரண்டாவது முறையாக போலீஸ்காரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும் இவர்கள் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தினை ஆண்டனி பரத்வாஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஹோம் மீடியா மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகின்றது. 29ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இருந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.மேலும் இதற்காக கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.