‘புரட்சி வீட்டிலிருந்து கிளம்புகிறது’ என முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் போஸ்டர்..

keerthi-suresh
keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது.

இப்படிப்பட்ட நிலைகள் ரசிகர்களின் அறிவுரையின்படி மீண்டும் தன்னுடைய உடலுடைய கொஞ்சம் உயர்த்தி உள்ளார். மேலும் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் தசரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் ஹோம்பலே ப்ளீஸ் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு மட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தில் காணும் தேசிய விருதும் பெற்று சாதனை படைத்தார்.

அந்த வகையில் தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கடைசியாக சாணிக்காகிதம் திரைப்படத்தின் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது இந்த படத்திற்கு பிறகு தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிசியாக இருந்து வரும் இவர் நானியுடன் இணைந்து தசரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தினை சுமன் குமார் எழுதி இயக்க ஷான் ரோல்டன் இசையமைக்க இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஹோமபலே ப்ளீஸ் தயாரிப்பு நிறுவனம் ரகு தாத்தா திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது என்ற வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பட குழுவினர்கள் உள்ள புகைப்படங்களையும் நடிகை கீர்த்தி சுரேஷ் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.