திருமணம் பற்றி முதல் முதலாக புகைப்படம் மூலம் பதில் சொல்லிய நடிகை கீர்த்தி சுரேஷ்.? அதுக்குன்னு இப்படியா பண்ணுவாங்க..

keerthi-suresh

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக பட்டிதொட்டி எங்கும் விளங்கி விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த தசரா திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மாமன்னன் போன்ற ஒரு சில திரைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வைத்துக் கொண்டு பட வாய்ப்பு இன்னும் அதிகரிக்க தேடி வருகிறார். பொதுவாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதேபோல் சமீபத்தில் இவரது திருமண வாழ்க்கையில் ஒரு தொழிலதிபருடன் திருமணம் நடக்க இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம் ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது instagram பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார் அப்பொழுது ஒரு ரசிகர் திருமணம் பற்றி கேட்டதற்கு பதில் சொல்லிய கீர்த்தி சுரேஷ் நடிகர் வடிவேலு புகைப்படத்தை தான் அந்த ரசிகருக்கு பதிலாக அளித்துள்ளார்.

அது இப்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது மேலும் கீர்த்தி சுரேஷ் இப்படி செய்தது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இந்த புகைப்படம் வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.

keerthi suresh
keerthi suresh