தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட ஏராளமானவர்க்கு ஜோடியாக நடித்துள்ளார் அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கச்சியாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தமிழில் இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் தான் சாமி காகிதம் இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி அன்று வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படத்தில் நடிகர் விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்து அசத்தியிருந்தார்கள்.
மேலும் இவர்களுடைய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டினை பெற்றது அந்த வகையில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த கதாபாத்திரம் தான் திரிஷாவின் குந்தவை இந்த கேரக்டரில் முதலில் நடிகை திரிஷா தான் நடிக்க தேர்வாகி இருந்தாராம் மேலும் இவர் அண்ணாத்த படத்தின் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருவேளை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற போஸ்டர், ட்ரைலர் போன்றவற்றை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.