தன்னுடைய சிறந்த காமெடி திறமையினால் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து சுறுசுறுப்பாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு நேற்று பிறந்தநாள் எனவே வைகைப்புயல் வடிவேல் தன்னுடைய பிறந்தநாளை மாமன்னன் பட குழுவினர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது இதன் காரணமாக தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் நடிகர் வடிவேலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு கூட நடிகர் உதயநிதி மற்றும் வடிவேலு, இயக்குனர் என அனைவருக்கும் விருந்து வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அது குறித்து கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வடிவேலு அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் மாமன்னன் படத்தின் எனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில் அவர் நடித்துள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் மேலும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது இவ்வாறு மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதனையும் பட குழுவினர்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள நிலையில் மாமன்னன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இன்னும் சில மாதங்களில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.