தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவனுடன் இணைந்து நடித்த வந்த சாணி கயிதம் படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்துவந்த சர்க்காரு வாரி பட்டா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்த படம் முதல் நாள் வசூலில் மட்டுமே 75 கோடியை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது தமிழில் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு பக்கம் அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் ரசிகர்களை கவரும் வகையில் சோஷியல் மீடியாவிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வபோது வெளியிட்டு வருவார். ஆனால் ஒருகட்டத்தில் கீர்த்தி சுரேஷ், “நான் எப்போதும் கவர்ச்சியான உடை அணிய மாட்டேன்.
அது எனக்கு செட் ஆகாது” என்று கூறியிருந்தார். இருந்தும் கொஞ்ச நாட்களாக இவரது புகைப்படங்கள் அனைத்தும் கிளாமர் ஆகவே அமைகின்றன. அதனால் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் சர்க்காரு வாரி பட்டா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கண்ணாடி போன்ற மெல்லிய சேலை அணிந்து வந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் கீர்த்தி சுரேஷ் ஷார்ட் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதெல்லாம் எனக்கு செட்டாகாது என சொல்லி வந்த கீர்த்தி சுரேஷ் இப்படி மாறி விட்டாரே என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.