அட்லீயின் பிறந்தநாள் பார்ட்டிக்கு தம்மாதுண்டு ட்ரெஸ்ஸில் வந்த கீர்த்தி சுரேஷ்..! வைரல் புகைப்படம் இதோ..

atlee
atlee

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அட்லீ இவர் இதுவரை விரல் விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படங்கள் தான். குறிப்பாக தளபதி விஜய் வைத்து இவர் எடுத்த தெறி, பிகில், மெர்சல் போன்ற படங்கள்  நல்ல வெற்றியை பெற்றன.

அதனைத் தொடர்ந்து இப்போ பாலிவுட் டாப் ஹீரோ  ஷாருக்கான் உடன் முதல் முறையாக கைகோர்த்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, யோகி பாபு, நயன்தாரா, சானியா மல்கோத்ரா, பிரியாமணி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் கேமியோ ரோலில் தளபதி விஜய்யும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ராணுவ சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது. அதிலும் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஜவான் படம் அடுத்த வருடம் நவம்பர் மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் அட்லீயின் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி வைக்கப்பட்டது அதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் குறிப்பாக விஜய், ஷாருக்கான் போன்றவர்கள் கலந்து கொண்டு பார்ட்டியை சிறப்பித்தனர் மேலும் அட்லீ உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், கதிர் போன்றவர்களும் இதில் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் தம்மாதுண்டு கருப்பு ட்ரெஸ்ஸில் செம்ம அழகாக இருந்தார். அட்லீயின் இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு பலரும் கருப்பு டிரஸ்ஸில் வந்தது தான் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் அட்லீயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்.

keerthy suresh
keerthy suresh