சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் சமீபத்தில் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த லெஜண்ட் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் போட்ட காசு வருமா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை சுமார் பத்து பன்னிரண்டு கோடி தான் காசை பார்த்து உள்ளது. இதனால் தற்பொழுது படகுழு சோகத்தில் இருக்கிறது மேலும் வியாபாரத்தில் வெற்றி கண்ட அவர் சினிமாவில் எடுத்த உடனே தோல்வியை சந்தித்துள்ளது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
மேலும் இது உங்களுக்கு தேவையில்லாத வேலை எனவும் பலரும் கூறிக் கொண்டுதான் வருகின்றனர். இருப்பினும் சரவணன் அருள் சினிமா உலகில் இது போன்ற பேச்சுகள் வருவது எல்லாம் சகஜம் என முன்கூட்டியே தன்னுடன் நெருங்கியவர்களுடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது அதனால் எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.
முதல் படம் தோல்வியில் முடிந்தாலும் அடுத்தடுத்த படத்தில் வெற்றியைக் காண அவர் ரெடியாக இருப்பதாக மறுபக்கம் பேசப்படுகிறது அந்த வகையில் சரவணன் அருள் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அந்த படத்தில் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகைகளில் ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும் என சரவணன் அருள் ஒத்த காலில் இருக்கிறாராம் அந்த நடிகைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் காசு தர இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சரவணன் நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது அவர் இப்பொழுது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் அவர் அதிகமாக கேட்டாலும் கூட அண்ணாச்சி கொடுக்க ரெடியாக இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் இது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.