தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக விஸ்வரூபம் எடுத்தார் தமிழில் இவர் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தார். அதன் பிறகு டாப் ஹீரோக்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து வெற்றியை பெற்று தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
இப்படி படிப்படியாக ஓடிய இவருக்கு பிற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தென்னிந்திய சினிமா முழுவதும் படங்களை அள்ளினார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இவர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து மாமன்னன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் அனிருத் இசை நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது அந்த நிகழ்ச்சயில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார் அப்பொழுது அனிருத் பாடிய மாஸ்டர் திரைப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் செம்ம குத்தாட்டம் போட்டு அசத்தி இருந்தார்.
அந்த வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது வீடியோவை பார்த்த ரசிகர்களும் செம்ம சூப்பர் என கூறிய லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடி அந்த வீடியோ..
Kutti Story Vibe ❤️ @KeerthyOfficial
— Filmy Kollywud (@FilmyKollywud) October 31, 2022