உதயநிதியுடன் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைப்படம்..

keerthi-suresh
keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று நடைபெற்ற ஓணம் பண்டிகையை நடிகர் உதயநிதியுடன் இணைந்து கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தை நடித்த வருகிறார்.

இந்த திரைப்படத்தினை பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது

இதன் மூலம் இயக்குனராக பிரபலம் அடைந்த உள்ள இவர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் படத்தினை இயக்கி வருகிறார் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாஸில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் என் இசையமைத்துள்ளனர்.

தற்பொழுது மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் பட குழுவினர்களுடன் இணைந்து ஓனம் பண்டிகையை கொண்டாடி உள்ளார் இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த வந்ததால் தமிழ் சினிமாவில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு உதயநிதியின் மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமாக உள்ளார்.