தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் திரை உலகில் முதன்முதலாக கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள்தான் இயக்கியிருந்தார்.
அந்த வகையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ் மரைக்காயர் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார்.
அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இந்த திரைப்படத்தில் கொடுத்த கதாபாத்திரம் ஆனது அர்ச்சா என்ற இளவரசி கதாபாத்திரம் ஆகும். மேலும் இந்த திரைப்படமானது 16ஆம் நூற்றாண்டில் நடந்த கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அதன் காரணமாக கீர்த்தி சுரேஷின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தத் திரைப்படத்திற்காக வே நடிகை கீர்த்தி சுரேஷின் தோற்றமானது ரவிவர்மாவின் ஓவியங்களை அடிப்படையாக வைத்து அதற்கு தகுந்தார்போல் கீர்த்தி சுரேஷ் வடிவமைத்துள்ளார்கள்.
அந்தவகையில் இது சம்பந்தமான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியதை தொடர்ந்து இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் மரைக்காயர் திரைப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது.