பிரபல அரசியல்வாதியுடன் ஜோடி போடும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! தேசிய விருதுக்காக என்னல்லாம் பண்றாங்க..!

keerthi-suresh-1
keerthi-suresh-1

திரை உலகில் முதல் முதலாக தயாரிப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த  நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி தலை சிறந்த அரசியல்வாதியும் கூட அந்த வகையில் சமீபத்தில் நடந்த  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மிக பிரம்மாண்டமாக அரசியல் செய்து வருகிறார் அந்த வகையில் இவர் இனிமேல் திரைப்படம் நடிக்க மாட்டார் என பலரும் நினைத்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கு மாறாக உதயநிதி தற்சமயம் சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளது மட்டும் இல்லாமல் நடிக்க ஆரம்பித்து விட்டாராம் இந்நிலையில் ஹிந்தியில் உருவாகிய மாபெரும் ஹிட் கொடுத்த ஆர்டிகள் 15 என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி என்ற டைட்டிலில் நடித்து வருகிறாராம்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் கர்ணன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கெனவே பல திரைப்படங்களில் கமிட்டாகி இருந்தாலும் உதயநிதி திரைப்படத்தை தான் முதலில் இயக்க உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிப்பது மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் அவர்கள் நடிக்க உள்ளார் மேலும் காமெடி கதாபாத்திரத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க உள்ளது என்ற திரைப்படத்தின் சிறப்பு அம்சம்.

மேலும் இந்த திரை படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்று இன்னும் தெரியாமல் இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிக ஆவலுடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என தெரியவந்துள்ளது.

அதேபோல இந்த திரைப்படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக இந்த திரைப்படத்தின்  மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் கண்டிப்பாக தேசிய விருது பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.