தென்னிந்திய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கிடைத்த ஒரு சில திரைப்படங்களின் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் சாணி காகிதம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தத் திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக வெளிவந்துள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் இதுவரை 24 கொலை செய்துள்ளேன் என்றும் உன்னையும் கொலை செய்வதை சேர்த்து 25வது கொலை என்றும் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனத்துடன் காகிதம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அதாவது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சாணி காகிதம் வருகின்ற மே 6ஆம் தேதி அமேசான் தளத்தில் ரிலீசாக உள்ளது. இத் தரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.
அடிபட்ட நிலையில் தற்பொழுது 3 நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் செல்வராகவன் 24 கொலை செய்ததாக கூறுகிறார் அதோடு கீர்த்தி சுரேஷ் இருபத்தி ஐந்தாவது கொலை என்று கூறி ஒரு கொலைக்கு கணக்கு இடிக்கிறதே என கேட்டவரை, உன்னையும் சேர்த்து 25வது கொலை என கீர்த்தி சுரேஷ் கூறுவதுடன் இந்த ட்ரெய்லர் முடிவடைகிறது.
இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார் சாம் சிஎஸ் இசையில் இத்திரைப்படம் உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது மிகவும் பயங்கரமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.