தளபதி 66 திரைப்படம் ஹீரோயின் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! அப்பா ஹீரோயின் இவங்க இல்லையா..?

vijay66

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி கண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் தற்போது டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவானது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய 66 ஆவது திரைப்படம் பற்றிய அப்டேட்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி அவர்கள்தான் இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக தளபதி விஜய் திரைப்படங்களில்  இசையமைப்பாளர் மிகத் திறமையாக உள்ளவர்களை தேர்வு செய்யப்படுவார்கள் அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் அவர்கள் தளபதி விஜயின் இந்த திரைப்படத்தில் இசை அமைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளாராம்.  இவ்வாறு இந்த திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு அப்டேட்டுகள் வெளிவந்த நிலையில் கதாநாயகி பற்றிய எந்த ஒரு அப்டேட்களும் வெளியாகவில்லை.

அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக  நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

vijay66
vijay66

ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ் நான் தளபதி விஜயுடன் அவருடைய 66ஆவது திரைப் படத்தில் நடிக்கவில்லை என்று தெளிவாக கூறியுள்ளார்.