தற்பொழுது உள்ள பல முன்னணி நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் சப்பியாக குறுகுறுவென்று கொழுகொழுவென இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தார்கள். இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியிலும் ஒரு இடம் கிடைத்தது.
அந்த வகையில் பிரபலமடைந்த ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குண்டாக தேவதை போல் இருந்ததால் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தனது உடல் எடையை மிகவும் குறைத்ததால் ரசிகர்கள் இவரை ஒட்டடைக்குச்சி உள்ளிட்ட பலவற்றை கூறி கிண்டல் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக முன்பு கிடைத்தது போல் தற்போது பட வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை. எனவே தற்பொழுது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கடைசியாக பென்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளிவந்தது.
இத்திரைப்படம் பட்ஜெட்டை விட மிகவும் குறைவாக வசூல் செய்ததாகவும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் தெலுங்கு நடிகர் நிதிவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்., தமிழில் ரஜினி, நயன்தாரா,குஷ்பு,மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து குட்லக்சசி என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது உள்ள நிலைமையினால் ஓடிடி வழியாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து இவரின் திரைப்படம் தான் ஓடிடி வழியாக வெளியாவதால் இவரை ரசிகர்கள் ஓடிடி ஹீரோயின் என கிண்டல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறாராம் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் நடித்து வரும் ஒரு திரைப்படம் மட்டும் தான் இவருக்கு கைவசம் உள்ளது.