கமர்சியல் ஹீரோயின்களாக கலக்கி வந்த பலர் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்த் கிடைத்தவுடன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு திறமையினால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் நடித்த மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கில் நடிகர் நிதிவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
அதன் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். என்னதான் இவர் சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு முன்பு இருந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் இல்லை ஏனென்றால் இவர் மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருப்பதால் இதனை ரசிகர்கள் விரும்பவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக பெண் குயின் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மிஸ் இந்தியா திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளிவந்து.
இந்த திரைப்படம் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக அமைந்தது மிகவும் அருமையான திரைப்படம் என்றாலும் இத்திரைப்படம் மக்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் இத்திரைப்படத்தினை டப் செய்து யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இப்படம் 25 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.