முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் இணைய இருக்கும் தெலுங்கு முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்.! வைரலாகும் தகவல்.

keerthi suresh
keerthi suresh

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் இவ்வாறு தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த இவருக்கு தெலுங்கு போன்ற மற்ற திரைவுலகிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிஸியாக இருந்து வந்தார்.இவ்வாறு அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்ததால் தற்போது தமிழில் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது கடைசியாக இவர் நடிப்பில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. இவர் நடிக்க உள்ள திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானியும்,  இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடிக்க உள்ளார்கள்.

கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஷங்கர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பட கதை பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.