தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வரும் அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் ரிலிசிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் ஏராளமான திரைப்படங்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் முக்கியமாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து அமோக வெற்றியைப் பெற்றதால் இத்திரைப்படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்து அமோக வெற்றியை பெற்ற திரைப்படம் ஒன்று தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் அதில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த திரைப்படம்தான் வேதாளம் இத்திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.
இத்திரைப்படம் தான் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித் கேரக்டரில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாகவும் \,அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.