இறுக்கமான உடையில் தனது கவர்ச்சியால் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த கீர்த்தி சுரேஷ்.! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா.? வருத்தத்தில் ரசிகர்கள்

keerthi-suresh

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்துகொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்து படுமோசமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டிங் குறைந்துள்ளது.  இதன் காரணமாக தற்பொழுது பட வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். அதோடு பப்ளிமாஸ் போன்ற தனது அழகான உடலமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் இதன் மூலம் இவருக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் கிடைத்தது.

அந்த வகையில் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திடீரென்று தனது உடல் எடையை குறைத்த காரணத்தினால் திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அந்த வகையில் கிடைத்த ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சாணி காகிதம் என்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நிதி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியில் அதிக ஆர்வமுடையவராக திகழ்கிறார் அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் இறுக்கமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவுகிறது.இதோ அந்த புகைப்படம்.