பல நடிகைகள் தங்களது அழகினாலும், சிறந்த நடிப்பு நாளும் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமடைந்த விடுகிறார்கள். அந்தவகையில் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே கிடுகிடுவென வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிகர் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம், தமிழ் என வரிசை கட்டி பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க இவரும் தொடர்ந்து தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என்று பலவற்றை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீப காலங்களாக இவர் வெளியீடும் வீடியோக்கள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதோடு தற்போது ரசிகர்கள் மத்தியில் குயின் என்ற அந்தஸ்தோடு வலம் வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் மீது பல காதல் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மல்கோவா போல இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.