லுங்கி கட்டிக்கொண்டு தன்னுடைய பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்..

தமிழ், தெலுங்கு என தொடர்ந்து இரண்டு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ் இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோக்களை பதிவு செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்பொழுது லுங்கி கட்டிக்கொண்டு செம டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார் இதற்கு லைக்குகளும் கமாண்டுகளும் குவிந்து வருகிறது. சோசியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமான பாலோசர்களை வைத்துள்ளார்.

இதன் காரணமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகளவில் ரீச்சாகி வருகிறது இவ்வாறு திரைப்படங்களில் நடிப்பதை விட இதில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் தற்பொழுது பிரபல முன்னணி நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் தசரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தாம் தூம் என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் ரீச்சாகி உள்ள நிலையில் தன்னுடைய தோழியுடன் இணைந்து லுங்கி கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, மீரா ஜாஸ்மின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த படத்தினை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரிலீசாக இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன், சிரஞ்சீவி உடன் போலோ சங்கர் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

வீடியோவை பார்க்க எங்களுக்கு கிளிக் செய்யவும்.