actress keerthi suresh latest news: தற்போது தமிழ் திரையுலகில் மாபெரும் இசை அமைப்பாளராக பறந்து ஒருவர்தான் இசையமைப்பாளர் அனிருத். இவர் திரைப்படத்தில் இசையமைப்பது மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவது நடனம் ஆடுவது என்ற பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்துள்ளார்.
இவ்வாறு புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத்தும் நடிகை கீர்த்தி சுரேஷும் மிக நெருக்கமான உறவில் இருப்பதாகவும் காதலிப்பதாகவும் செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த வதந்திகளை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பல்வேறு பிரபலங்களும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள் ஆனால் இது கீர்த்தி சுரேஷ் தரப்பின் படி பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவருடைய தந்தை இது பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.
ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான் முதலில் இல்லை என்பதும் அதன் பின்பு உண்டு என்பதும் வழக்கம்தான் இவற்றை ரசிகர்கள் நம்பாமல் மீண்டும் மீண்டும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய அம்மா தனக்கு மருதாணி வைக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு தலைப்பாக இது தான் உண்மையான காதல் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இவர் கோரியதை பார்த்தால் அணிருத் இருக்கும் எனக்கும் எந்த ஒரு உறவும் கிடையாது என்பதை கூறியது போன்றே இருக்கிறது என்று கூறியுள்ளார் மேலும் அனிருத் ஆண்ட்ரியா ஆகிய இருவரையும் ஒன்றிணைத்தது பேசி அவர்களுடைய இமேஜை டேமேஜ் ஆகி விட்டார்கள்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய பெயரும் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு செயலை செய்துள்ளார் என ரசிகர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.