தமிழ் சினிமாவில் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.என்னதான் தற்போது இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் சரியான வெற்றியை கொடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றி கண்டது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு திரைப்படமான ரெமோ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், விக்ரம், சூர்யா போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவ்வாறு ஆரம்பத்தில் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நமது நடிகை தற்போது மாடர்ன் ஆகவும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலமாக இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் மகாநதி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இதற்கான தேசிய விருதையும் நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.
இதனை தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பாராட்டும் வகையில் தன்னை பலப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது பாலிவுட்டில் நடிப்பதற்கான ஆசை வந்துவிட்டது.
இதன் காரணமாக தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டு எலும்பும் தோலுமாக மாற்றிக்கொண்டு பட வாய்ப்பிற்காக நடிகை கீர்த்தி காத்திருந்தார். ஆனால் நமது நடிகைக்கு வாய்ப்பு தராமல் நயன்தாரா சமந்தா போன்ற பப்ளியான நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்புகளை கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் தனக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கிடைக்க வில்லை என்ற சோகத்தில் இருக்கும் கீர்த்தி ஒரு சரியான மாஸ்டர் பிளான் போட்டு விட்டார் அதாவது என்னவென்றால் பாலிவுட்டில் ஹிட்டடித்த திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து அதனை ரீமேக் செய்து எப்படியாவது ரசிகர்களை கவர்ந்து விடலாம் என முடிவு செய்துள்ளாராம்.
ஆனால் பாலிவுட் சினிமாவில் தமிழ் கதை ஏதும் கிடைக்காத காரணத்தினால் தமிழ் திரைப்படங்களை ரீமேக் செய்து ஓட்டி வருகிறார்கள் இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் ஐடியா வொர்க் அவுட் ஆகுமா என்பது ஒரு டவுட்டு தான்.