actress keerthi suresh latest cricket video: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முதன்முதலாக இது என்ன மாயம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.
என்னதான் இந்த திரைப்படத்தில் நமது நடிகை சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தாலும் சொல்லும்படி பிரபலமாகவில்லை இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.
மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை தான் நடித்த திரைப்படத்தில் கிளாமரை சிறிது கூட காட்டியது கிடையாது அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் தனது வீட்டு மொட்டை மாடியில் நடிகை கீர்த்தி சுரேஷ் பௌலிங் போட்டு கற்றுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சிறிது நேரத்திலே பல கோடி லைக்குகளை பெற்று வருகிறது.
#keerthiSuresh pic.twitter.com/6Qs7Q60GrR
— Tamil360Newz (@tamil360newz) July 25, 2021