சூர்யா சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி 2டி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் தன் படங்களையும் மற்றும் சிறப்பான பல்வேறு படங்களையும் தயாரித்து கொடுத்து அசத்துகிறார். இதனால் சூர்யாவின் வளர்ச்சி சினிமா உலகில் அளப்பரிய ஒன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா தற்போது பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கதையை கேட்டு கமிட்டாகி வருகிறார்.
அந்த வகையில் ஜெய்பீம் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் வெற்றி மாறனுடன் இணைகிறார். அதன்பின் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் அதன் பிறகு பாலாவுடனும் ஒரு படம் பண்ணுவதாக கூறப்படுகிறது ஏற்கனவே இரண்டு முறை பாலாவுடன் இணைந்து நிலையில் மூன்றாவது முறையாகவும் சூர்யா – பாலா கூட்டணி இணைய உள்ளது.
சூர்யா தயாரித்து வரும் 2டி என்டர்டைனமென்ட் தான் பாலாவின் படத்தை தயாரிக்க அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அது ஒரு வழியாக நிறைவேறியிருக்கிறது ஆம் பாலா – சூர்யா ஆகியோர் இணையும் படத்தை தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது மேலும் சூர்யாவும் கீர்த்தி சுரேஷின் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனராம்.
இதற்காக முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது ஒரு வழியாக சம்மதிக்க பட்டதாக கூறப்படுகிறது இந்த படத்திற்காக மூன்று மாதம் சூர்யாவும், கீர்த்தி சுரேஷும் கால்ஷீட் கொடுத்து உள்ளதாக தெரியவருகிறது ஆனால் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க சற்று பயத்திலிருப்பத்தாக தெரிய வருகிறது. ஏன் என்றால் பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்.
அவரது படத்தில் பெரும்பாலான மேக்கப் மேன்னு வெளியே இருக்காது. இருக்கின்ற உண்மையான முகத்தையே படத்தில் காட்ட நினைப்பார். மேலும் மூன்று மாதம் சொல்லிவிட்டு ஆறு மாதங்கள் பாலா படத்தை இழுத்து விட்டால் தனது கால்ஷீட் நிலைமை என்ன ஆவது மற்றும் மற்ற படங்களில் நடிக்க முடியுமா முடியாதா என்ற ஒரு அச்சமும் தற்போது கீர்த்தி சுரேஷ் வந்துள்ளதாம்.இதை முடித்துவிட்டு சூர்யா சிறுத்தை சிவாவுடன் 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் ஒரு புதிய படத்தையும் எடுத்திருக்கிறார்.