தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் என்றால் அது நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல மலையாள தயாரிப்பாளரின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல கீர்த்தி சுரேஷின் தாயாரும் மிக பிரபலமான நடிகை ஆவார் அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவருடைய பெயர் மேனகா.
மேலும் கீர்த்தி சுரேஷின் தாயார் திரை உலகில் மிக பிரம்மாண்டமான நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ் தயாரிக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் கீர்த்தி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது இன்று மிக பிரமாண்டமாக துவங்கப்பட்டுள்ளது இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் டோவினோ தோமஸ் என்பவர் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு வாசி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.