கதாநாயகியாக வலம் வருவது மட்டுமின்றி தற்போது திரைப்படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! ஹீரோ யார் தெரியுமா..?

keerthi-suresh.jpg-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஒருபோதும் திரைப்படத்தில் கவர்ச்சி என்ற வார்த்தைக்கு இடம் கொடுத்தது கிடையாது அந்த வகையில் கமர்சியலாக நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

அந்த வகையில் நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் ரஜினிகாந்த்  சிவகார்த்திகேயன் என பல்வேறு நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் கூட முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் திரைப்படங்களில் நடித்து இருந்தார் பின்னர் தான் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவ்வாறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை தற்போது திரைப்படங்கள் தயாரிக்கவும் முன் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்திற்கு வாஷி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் டோவினோ தாமஸ் என்பவர் நடிக்க உள்ளார் இவர் ஒரு மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இவர் மாரி 2 திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.

keerthi suresh
keerthi suresh

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு இயக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.