தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமைனாளும், அழகினாலும் கிடுகிடுவென வளர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே விஜய், விக்ரம், ரஜினி, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்பொழுது இவர் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்களிலேயே மாபெரும் வெற்றியையும் அந்தஸ்தையும் தந்த திரைப்படம் என்றால் அது மகாநடி திரைப்படம் தான்.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு அதில் கீர்த்தி சுரேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் பெற்றார். பொதுவாக கீர்த்தி சுரேஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் ஜாலியாக பழகும் குணமுடையவர்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவ்வபொழுது சூட்டிங் ஸ்பாட்டில் கீர்த்தி சுரேஷ் பத்து முறை சீட் அப் எடுக்கிறார். தோற்றதற்கான தண்டனை என்ற கேப்ஸ்சணுடன் அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
அது வேறொன்றுமில்லை படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து டயட்டில் இருந்து வருகிறார். எனவே அதனை உடைக்கும் வகையில் நடிகர் நிதின் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி இருவரிடமும் பந்தயம் கட்டி அதில் கீர்த்திசுரேஷ் தோற்று விட்டாராம். எனவே பத்து முறை சிட் அப்ஸ்கள் செய்துள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.