தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் என்றால் அது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவர் அறிமுகமானது எனவோ மலையாள திரைப்படத்தின் மூலம் தான்.
அந்த வகையில் நமது நடிகை பாரபட்சமின்றி தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழி களிலும் திரைப்படங்கள் நடித்து வருவது மட்டுமில்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மரக்காயர் என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ரவிவர்மா ஓவியத்தை போலவே கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.
பொதுவாக நமது நடிகைக்கு செல்ஃபி எடுப்பது மிகவும் பிடிக்கும் அந்த வகையில் தனக்கு பிடித்த இடம் அவர் கண்களுக்கு தென்பட்டால் உடனே அங்கு புகைப்படம் எடுப்பது வழக்கம் தான் இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது திருமண விழாவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.