வாரிசு நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தனது அப்பா தயாரித்து வரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் ஆவார். இவர் தயாரிப்பில் வெளிவந்த அன்பிற்கினியால் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து கலக்கப் போவது யாரு பாலா உள்ளிட்ட இன்னும் சிலர் நடித்திருந்த தும்பா திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் இத்திரைப்படம் அமைந்ததால் சொல்லுமளவிற்கு இத்திரைப்படத்தை தரவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அருண்பாண்டியன் தயாரித்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் அப்பா மற்றும் மகள் சென்டிமென்ட் வைத்து உருவாகி வரும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதோடு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீடு மிகவும் ஆக்டிவாக இருந்தாலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தள்ளாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ராயல் என்ஃபீல்டு பைக் ஒட்டியுள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
இதனைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் மாளவிகா மோகனனை காப்பியடித்து உள்ளீர்கள் என்று கூறி வருகிறார்கள்.அதோடு அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.