சொந்த ஊரில் அப்பா வீடியோ எடுக்க செம குத்தாட்டம் போடும் கீர்த்தி பாண்டியன்.! இதை விட மகிழ்ச்சி எதில் இருக்கிறது எனக் கூறும் ரசிகர்கள்.!

அன்பிற்கினியால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன். இதனைத் தொடர்ந்து தும்பா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு கண்டிப்பாக திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று நம்பி வந்த கீர்த்தி பாண்டியனுக்கு பெரும் தோல்வியையே தழுவியது.

இத்திரைப்படம் மிகவும் காமெடியாக நன்றாக இருந்தாலும் குழந்தைகள் விரும்பும் வகையில் இருந்ததால் சொல்லுமளவிற்கு இத்திரைப்படம் இவருக்கு பிரபலத்தை தரவில்லை. இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான கீர்த்தி பாண்டியனின் அப்பா அருண்பாண்டியன் இயக்கி வரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அருண்பாண்டியன் மலையாளத் திரைப்படத்தில் தனது மகளை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படம் அப்பா மகளின் உன்னதமான உறவை வைத்து எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கி உள்ளது. அந்த வகையில் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள பல நடிகர் நடிகைகள் தங்களது சொந்த ஊருக்கு சென்று உள்ளார்கள்.

அந்தவகையில் கீர்த்தி பாண்டியனும் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்றுள்ளார். அங்கு நெல் அறுவடை செய்வது, இளநீர் வெட்டி குடிப்பது என்று மிகவும் மகிழ்ச்சியாக லாக் டவுன் நாட்களை கழித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது அப்பா வீடியோ எடுக்க நடிகர் தனுஷின் பாடலான எண்ணம் மட்டும் லவ் யூ பண்ண புஜ்ஜி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் சொந்த ஊர் என்றாலே சொர்க்கம் தான் இதை விட என்ன வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.