விஜயின் முதல் திரைப்படத்தின் கதாநாயகி இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

vijay-keerthana

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் தனது விடா முயற்சியினாலும், சிறந்த நடிப்பு திறமையினாலும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றவர்தான் நடிகர் விஜய். தற்போது வேண்டுமானால் விஜய் முன்னணி நடிகராகவும் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகராகவும் இருக்கலாம் ஆனால் ஆரம்ப காலத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.

அதன்பிறகு தான் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது அசைக்கமுடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வரும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்துள்ளார்.  விஜய் குழந்தை நட்சத்திரமாக தான் திரைப்படங்களில் நடிப்பதை தொடங்கினார் அதன்பிறகு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் பெரிதாக பிரபலமடையாத காரணத்தினாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதற்காகவும் ஏராளமான நடிகைகள் இவருடன் இணைந்து நடிப்பதற்கு விரும்பாமல் இருந்து வந்தனர் அதோடு இயக்குனர்களும் விஜயை வைத்து திரைப்படத்தை இயக்குவதற்கு தயங்கினார்கள் என்று அவ்வப்போது ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. இப்படிப்பட்ட நிலையில்  விஜய்க்கு ஜோடியாக முதன் முதலில் நடிகை கீர்த்தனா தான் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்திருந்தார் விஜயை தொடர்ந்து கீர்த்தனா அஜித்துடன் இணைந்து மைனர் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் கீர்த்தனா விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல வருடங்களுக்கு முன்பே நடித்து இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல தளபதிவுடன் நடித்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

KEERTHANA
KEERTHANA