தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் குறைந்து கொண்டே வருகிறது அதாவது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு இந்த படம் பெரிதாக சொல்லும் அளவிற்கு அமையவில்லை இதனை அடுத்து சாணி காகிதம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தாலும் திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
எனவே தமிழ் சினிமாவில் நடிக்காமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் ரகு தாத்தா என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இழந்த மார்க்கெட்டை திரும்ப பெறுவாரா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தை சுனில் இயக்க இருக்கும் நிலையில் சுதா கொங்காரா எக்ஸ்கிலியூடிவ் ப்ரொடியூசராக பணியாற்ற உள்ளார்.
மேலும் இந்த படத்தினை கேஜிஎஃப், காந்தாரா போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் கொம்பாலையா ஃபிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையே சில பிரச்சனைகள் வந்ததாகவும் இதனால் இவர்களுடைய மனக்கசப்பு ஏற்பட்ட விட முதல் படப்பிடிப்புக்காக கால் சீட் கொடுத்த கீர்த்தி சுரேஷ் தற்பொழுது இரண்டாவது படப்பிடிப்புக்காக கால் சீட் கொடுக்காமல் படக்குழுவினரை கடுப்பேற்றி வருகிறாராம்.
மேலும் கீர்த்தி சுரேஷிடம் கேட்டபோது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார் என்பதனால் சுதா கொங்காரா கீர்த்தி சுரேஷ் மீது செம கோவத்தில் இருந்து வருகிறாராம். சுதா கொங்காரா இதற்கு முன்பு சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தினை இயக்கியிருந்த நிலையில் சூர்யா பல மேடைகளில் சுதா கொங்கா ரா பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளார்.
இவ்வாறு சுதா கொங்காராவை விட தயாரிப்பு நிறுவனம் கொம்பாலையா பிலிம்ஸ் தான் கீர்த்தி சுரேஷின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறதாம் ஆனால் இந்நிறுவனம் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலைகயில் இவ்வாறு கீர்த்தி சுரேஷ் செய்வதால் அந்த படம் நன்றாக வரவில்லை என்றால் படம் வெற்றியை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.