Actress Kavya New Look Photo: சீரியல்களின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பட்டித் தொட்டியங்கும் பிரபலமானவர்தான் நடிகை காவியா அறிவுமணி. இவர் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். அப்படி காவியா முதன்முறையாக பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கவின் நடிக்கும் ஊர் குருவி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்து வரும் நிலையில் மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் காவியா.

அதோடு மட்டுமல்லாமல் காவியா வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் மறுபுறம் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் படும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் இவருடைய கவர்ச்சி போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் காவியாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மேலும் அதிக நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது.
