கொரோனா என்ற ஒரு பெரும் தொற்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களை தாக்கி வருகிறது. இந்தப் பெரும் தொடரின் முதல் அலையை விட இரண்டாவது அலை ஒட்டுமொத்த மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதுவும் முக்கியமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்து வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களாக தான் குறைய ஆரம்பித்துள்ளது. எனவே இந்தப் பெரும் தொற்றில் இருந்து அனைவரும் தப்பிக்க வேண்டுமென்றால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது, வீட்டில் இருக்கும் பொழுதும் மாஸ்க் அணிவது மற்றும் சனிடைசர் வைத்து கைகளை கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவற்றை செய்தால் கண்டிப்பாக இதில் இருந்து மீண்டு விடலாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறார்கள்.
அதுவும் முக்கியமாக இந்த வருடம் தொடர்ந்து ஏராளமான திரை பிரபலங்கள் இறந்து வருவதால் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பிரபல நடிகை கவிதாவின் மகன் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தோற்று பாதிக்கப்பட்டதால் இவரின் மகன் சாய் ரூப் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரின் மகனை தொடர்ந்து இவரின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் நிலையும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை கவிதா தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடித்து வருகிறார். இவர் ரஜினி, கமல் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அந்த வகையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழியில் தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 400 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார் கவிதா.